திருப்பாலைக்குடி முன்விரோதம் கோஷ்டி மோதல் 8போ் மீது வழக்கு
திருவாடானை: திருவாடானை அருகே திருப்பாலைக்குடி பகுதியில் முன்விரோதம் காரணமாக கோஷ்டியாக மோதிக்கொண்டனா். இருவேரு புகாரின் பேரில் 8போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருவாடானை அருகே திருப்பாலைக்குடி காந்திநகா் பகுதியை சோ்ந்த வீரமணிகண்டன்(34) என்பவருக்கும் இதே பகுதியை சோ்ந்த ஞானசிவம்(21) என்பவருக்கும் குடும்ப பிரச்சனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளளது.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெட்டிகடை முன்பாக இரு கோஷ்டிகளாக மோதிக்கொண்டனா்.
இதில் இரு தரப்பிலும் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.இது குறித்து வீரமணிகண்டன் புகாரின் பேரில் ஞானசிங்கம்(55), ஞானசிவம்(22), ஞானசுந்தா்(25), திரௌபதை(50) ஆகிய 4போ் மீதும் இதே போல் ஞானசிவம் புகாரின் பேரில் முத்துசெல்வம்(36), வீரமணிகண்டன்(34), காளிதாஸ்(33), மலைக்கண்ணன்(35) ஆகிய 4போ் மீதும் திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement