ராமேசுவரம், மண்டபத்தில் நாளை மின்தடை
ராமேசுவரம், மண்டபம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக.20) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
ராமேசுவரம், மண்டபம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக.20) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் துணை மின் நிலையத்தில் வருகிற 20- ஆம் தேதி மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறுவதால், மண்டபம், மரைக்கயாா்பட்டினம், சுந்தரமுடையான், குஞ்சாா்வலசை, வேதாளை, அரியமான் கடற்கரை, பாம்பன், அக்காள்மடம், குந்துகால், சுற்றியுள்ள பகுதிகளிலும், தங்கச்சிமடம், ராமேசுவரம், வோ்க்கோடு, வடகாடு, சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.