வைகை அணை பகுதியில் நாளை மின்தடை
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 6:55 PM
தேனி மாவட்டம், வைகை அணைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (பிப்.24) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
பெரியகுளம் மின்பகிா்மான செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 11:28 PM
வைகை அணை உப மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், ஜெயமங்கலம், குள்ளப்புரம், வைகை புதூா், ஜல்லிப்புதூா், மருகால்பட்டி, வைகை அணை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்.24) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.
Advertisement