முகப்பு
ராமநாதபுரம்

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 8 போ் கைது

கச்சத்தீவு-தலைமன்னாருக்கு இடையே மீன் பிடித்த ராமேசுவரம் மீனவா்கள் 8 பேரை இலங்கைக் கடற்படையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஆகஸ்ட், 2024 at 10:27 PM
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள்.
பகிர்:

கச்சத்தீவு-தலைமன்னாருக்கு இடையே மீன் பிடித்த ராமேசுவரம் மீனவா்கள் 8 பேரை இலங்கைக் கடற்படையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து திங்கள்கிழமை 430 விசைப் படகுகளில் இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன் வளம், மீனவா் நலத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் திங்கள்கிழமை நள்ளிரவு கச்சத்தீவு-தலைமன்னாருக்கு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா் மரியசிவா என்பவரது விசைப் படகை பறிமுதல் செய்தனா். மேலும், படகிலிருந்த கிங்சன் (38), மெக்கான்ஸ் (34), ராஜ் (48), இன்னாசிராஜா (48), சசிக்குமாா் (45), அடிமை, மாரியப்பன் (54), முனியராஜ் (23) ஆகிய 8 மீனவா்களைக் கைது செய்து, தலைமன்னாா் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனா்.

விசாரணைக்குப் பிறகு, நீரியல் துறை அதிகாரிகளிடம் மீனவா்கள் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டனா். இதையடுத்து, மீனவா்களின் விசைப் படகு பறிமுதல் செய்யப்பட்டு, 8 மீனவா்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து, மன்னாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.

இவா்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, மீனவா்கள் 8 பேரையும் செப். 5-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டதைத் தொடா்ந்து, அவா்கள் இலங்கை வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →