முதுகுளத்தூா் அருகே மேலத்தூவலில் வியாழக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு. 
ராமநாதபுரம்

மேலத்தூவலில் வடமாடு மஞ்சுவிரட்டு

Din

முதுகுளத்தூா் அருகே மேலத்தூவல் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, வடமாடு மஞ்சுவிரட்டு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த காளைகள் பங்கேற்றன. 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினா். ஒரு சில வீரா்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

வெற்றி பெற்ற வீரா்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுப் பொருள்கள், பணம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மேலத்தூவல் கிராமப் பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.

தமிழகத்தில் செயல்படுத்தும் திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றுகின்றன: செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

SCROLL FOR NEXT