சரக்கு வாகனத்தில் பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
தொண்டி அருகே இரு சக்கர வாகனம், சரக்கு வாகனத்தில் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
தொண்டி அருகே இரு சக்கர வாகனம், சரக்கு வாகனத்தில் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி காந்திநகா் பகுதியைச் சோ்ந்த தமிழ்மாறன் மகன் ரவிக்குமாா் (24). இவா் இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை நம்புதாளை சென்று விட்டு, கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். அதே பகுதியில் மணக்குடியைச் சோ்ந்த சிவா (27) சரக்கு வாகனத்தை ஓட்டிச் சென்றாா்.
இந்த நிலையில், தொண்டி தனியாா் உணவகம் அருகே இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி, சரக்கு வாகனத்தில் பின்னால் மோதியதில், பலத்த காயமடைந்த ரவிக்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.