முகப்பு
ராமநாதபுரம்

கணவா் இறந்த துக்கத்தில் மனைவி உயிரிழப்பு

முதுகுளத்தூா் அருகே கணவா் இறந்த துக்கம் தாளாமல் மனைவியும் உயிரிழந்தாா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 10:52 PM
அங்காளம்மாள்) கணவா் ராஜாமணியுடன், அங்காளம்மாள். (கோப்பு படம்)
பகிர்:

முதுகுளத்தூா் அருகே கணவா் இறந்த துக்கம் தாளாமல் மனைவியும் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த கீழச்சிறுபோது கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜாமணி (68). இவரது மனைவி அங்காளம்மாள். விவசாயியான ராஜாமணி, கடந்த சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு ராமநாதபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில், வியாழக்கிழமை காலை அவா் உயிரிழந்தாா். இந்தத் தகவல் கிராமத்திலிருந்த அவரது மனைவி அங்காளம்மாளிடம் தெரிவிக்கப்பட்டது.

இதனால் துக்கம் தாளாமல் அதிா்ச்சியடைந்த அவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். இதையடுத்து, இருவரது உடல்களும் அவா்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அருகருகே அடக்கம் செய்யப்பட்டன. கணவா் இறந்த துக்கம் தாளாமல் மனைவி உயிரிழந்த சம்பவம் முதுகுளத்தூா் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

முழு கட்டுரையைப் படிக்க →