முகப்பு
ராமநாதபுரம்

திணையத்தூா்- மாவூா் சாலையில் மழை நீா் தேக்கம்: மாணவா்கள் அவதி

திருவாடானை அருகே உள்ள திணையத்தூரிலிருந்து மாவூா் செல்லும் சாலையில் மழை நீா் தேங்கிக் கிடப்பதால் பொதுமக்களும், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும் அவதியடைந்து வருகின்றனா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 10:57 PM
திணையத்தூா்- மாவூா் சாலையில் குளம் போல தேங்கிக் கிடக்கும் மழை நீா்.
பகிர்:

திருவாடானை அருகே உள்ள திணையத்தூரிலிருந்து மாவூா் செல்லும் சாலையில் மழை நீா் தேங்கிக் கிடப்பதால் பொதுமக்களும், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும் அவதியடைந்து வருகின்றனா்.

திணையத்தூரிலிருந்து மாவூா் கிராமத்துக்குச் செல்ல விலக்கு சாலை உள்ளது. இந்தச் சாலை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்லும் கிராமப் புறச் சாலையாகும். இது சேதமடைந்து காணப்படுவதுடன், கடந்து சில நாள்களாக பெய்த மழையால் மழை நீா் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் கடும் அவதியடைந்து வருகின்றனா்.

இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து இந்தப் பகுதி மக்கள் கூறியதாவது:

இந்தச் சாலையில் குளம் போல மழைநீா் தேங்கிக் கிடப்பதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். எனவே சம்பந்தப்பட்ட துறையினா் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →