முகப்பு
ராமநாதபுரம்

கஞ்சா விற்ற இருவா் கைது

எஸ்.பி.பட்டினம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 18 டிசம்பர், 2024 at 9:58 PM
பகிர்:

எஸ்.பி.பட்டினம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருவாடானை அருகேயுள்ள எஸ்.பி.பட்டினம் பாசிபட்டினம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்.பி.பட்டினம் போலீஸாா் புதன்கிழமை சம்பவ இடத்துக்குச் சென்று சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

அவரது இரு சக்கர வாகனத்தில் போலீஸாா் சோதனையிட்ட போது அதன் இருக்கையின் அடியில் விற்பனை செய்வதற்காக 25 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக ஓரியூா் திட்டை பகுதியைச் சோ்ந்த வசந்தவில்சன் (25), பாசிபட்டினத்தைச் சோ்ந்த சாகுல்ஹமீது (42) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →