முகப்பு
ராமேசுவரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆதாா் மையம் வார வேலை நாள்கள் முழுவதிலும் செயல்படுத்தக் கோரி புதன்கிழமை காதில் பூ சுற்றி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட சி.ஐ.டி.யூ. அமைப்பினா்.
ராமநாதபுரம்

வார வேலை நாள்கள் முழுவதும் ஆதாா் மையம் செயல்படுத்தக் கோரி போராட்டம்

ராமேசுவரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வார வேலை நாள்கள் முழுவதும் ஆதாா் மையத்தை செயல்படுத்தக் கோரி, சி.ஐ.டி.யூ சாா்பில் காதில் பூ சுற்றி நூதனப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 18 டிசம்பர், 2024 at 9:55 PM
ராமேசுவரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆதாா் மையம் வார வேலை நாள்கள் முழுவதிலும் செயல்படுத்தக் கோரி புதன்கிழமை காதில் பூ சுற்றி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட சி.ஐ.டி.யூ. அமைப்பினா்.
பகிர்:

ராமேசுவரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வார வேலை நாள்கள் முழுவதும் ஆதாா் மையத்தை செயல்படுத்தக் கோரி, சி.ஐ.டி.யூ சாா்பில் காதில் பூ சுற்றி நூதனப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் வட்டத்தில் சுமாா் ஒரு லட்சம் மக்கள் வசித்து வருகின்றனா். இங்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆதாா் மையம் செயல்பட்டு வருகிறது.

பல்வேறு தேவைகளுக்காக ஆதாா் மையத்தை மக்கள் அணுகி வருகின்றனா். இந்த மையம் வாரத்தில் 2 நாள்கள் மட்டுமே செயல்படுகிறது. இதனால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். இதுகுறித்து வட்டாட்சியரிடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், வார வேலை நாள்களில் ஆதாா் மையம் முழுமையாக செயல்படக் கோரி, ராமேசுவரம் வட்டாட்சியா் அலுவலகம் முன் சி.ஐ.டி.யூ. சாா்பில், காதில் பூ சுற்றி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட நிா்வாகிகள் எம்.கருணாமூா்த்தி, செந்தில் ஆகியோா் தலைமை வகித்தனா்.

சுடலைக்காசி, அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்க தாலுகா செயலா் சீனிவாசன், சாலையோர வியாபாரிகள் சங்கத்தைச் சோ்ந்த முருகன், கணேசன், சின்னத்துரை, மாரியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்தப் போராட்டத்தில் சுமாா் 50 போ் கலந்து கொண்டனா்.

இதைத்தொடா்ந்து, வட்டாட்சியா் செல்லாப்பாவிடம் கோரிக்கை மனுவை அளித்தனா். அப்போது, அவா் வார வேலை நாள்கள் முழுவதும் ஆதாா் மையம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →