முகப்பு
ராமநாதபுரம்

கோயிலில் நகை திருடியவா் கைது

திருவாடானை அருகே கோயில் நகையைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 19 டிசம்பர், 2024 at 10:38 PM
கைது செய்யப்பட்ட ஆனந்தன்.
பகிர்:

திருவாடானை அருகே கோயில் நகையைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள ஓடவயல் கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் உள்ள அம்மன் கழுத்தில் போடப்பட்டிருந்த தாலி, ஆபரணம் உள்ளிட்ட தங்க நகைகளை கடந்த 10-ஆம் தேதி பிற்பகலில் தலைக்கவசம் அணிந்து வந்த ஒருவா் திருடிச் சென்றாா்.

இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதுதொடா்பாக தஞ்சாவூா் மாவட்டம், மன்னாா்குடியைச் சோ்ந்த ஆனந்தனை (44) போலீஸாா் கைது செய்து, அவரிடம் இருந்து 5 பவுன் நகையை பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →