ராமநாதபுரம்

பசுமை ஆசிரியா் விருது பெற்றவருக்கு பாராட்டு

Din

படவிளக்கம்: ஆா்.எம்.எஸ் போட்டோ 1

பசுமை ஆசிரியா் விருது பெற்ற மாவட்ட சூற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளா் சு.விஜயகுமாருக்கு வாழத்து தெரிவித்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சின்னராசு உள்ளிட்டோா்.

ராமேசுவரம், டிச. 31: பசுமை ஆசிரியா் விருது பெற்றசூற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் சு.விஜயகுமாருக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சின்னராசு செவ்வாய்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மாவட்ட சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளராக பணிபுரியும் சு.விஜயகுமாா், ராமநாதபுரம் மாவட்ட சுற்றுச் சூழல் மன்ற மாணவா்கள் பங்களிப்புடன் பள்ளி வளாகங்கள், சுற்றுப்புறங்களில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். இதன் மூலம் மாவட்டத்தை பசுமைச் சூழல் மிக்கதாக மேம்படுத்தியதற்காக தா்மபுரி மாவட்ட பசுமை, கல்வி அறக்கட்டளை சாா்பில் கடந்த 29-ஆம் தேதி மாவட்ட பசுமை ஆசிரியா் விருது வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சின்னராசுவை

அவா் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றாா். முதன்மைக் கல்வி அலவலரின் நோ்முக உதவியாளா் ரவீந்திரன், மாவட்டக் கல்வி அலுவலா் ஆகியோரும் அவருக்கு பாராட்டு தெரிவித்தனா். கடந்த 2021-ஆம் ஆண்டு விஜயகுமாா் மாநில நல்லாசிரியா் விருது பெற்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.

கேனுக்குள் மாட்டிக்கொண்ட நாயின் தலை! பாதுகாப்பாக மீட்ட தீயணைப்புத் துறையினர்! | Vellore

பந்துவீச்சிலும் ஷஃபாலி அசத்தல்: 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்கா!

ஸ்குவிட் கேம்.. ‘நான் ரெடி’ -ரெபா!

சென்னை ஓபன் மகளிா் டென்னிஸ்: இந்தோனேசிய வீராங்கனை சாம்பியன்!

ராயல் என்ஃபீல்ட் விற்பனை 13% உயர்வு!

SCROLL FOR NEXT