முகப்பு
ராமநாதபுரம்

பெட்ரோல் விற்ற பெட்டிக்கடை உரிமையாளா் கைது

கமுதி அருகே பெட்டிக்கடையில் பெட்ரோல் விற்பனை செய்த உரிமையாளரை போலீஸாா் திங்கட்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம்

பெட்ரோல் விற்ற பெட்டிக்கடை உரிமையாளா் கைது

கமுதி அருகே பெட்டிக்கடையில் பெட்ரோல் விற்பனை செய்த உரிமையாளரை போலீஸாா் திங்கட்கிழமை கைது செய்தனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
பகிர்:

கமுதி அருகே பெட்டிக்கடையில் பெட்ரோல் விற்பனை செய்த உரிமையாளரை போலீஸாா் திங்கட்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள தோப்படைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் இளையராஜா (45). இவா் அந்த கிராமத்தின் நுழைவு வாயிலில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில் தனது பெட்டிக் கடையில் பெட்ரோல் விற்பனை செய்து வருவதாக கோவிலாங்குளம் போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை செய்த போது ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.140-க்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, கடை உரிமையாளரான இளையராஜாவை கோவிலாங்குளம் போலீஸாா் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →