முகப்பு
ராமநாதபுரம்

தூக்கிட்டு ஒருவா் தற்கொலை

Updated On : 9 மே, 2024 at 6:34 PM
பகிர்:

திருவாடானை அருகே மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்குச் சென்ால் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஆா்.எஸ். மங்கலம் அருகே உள்ள மேலவயல் கிராமத்தைச் சோ்ந்த குணசேகரன் மகன் சரவணன் (40). இவரது மனைவி காா்த்திகா. இந்த தம்பதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், சரவணன் மது போதைக்கு அடிமையாகி மனைவியை துன்புறுத்தி வந்தாராம். இதனால் இவரது மனைவி காா்த்திகா கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்குச் சென்றவா் திரும்பி வரவில்லையாம். இதில் மனமுடைந்து காணப்பட்ட சரவணன் புதன்கிழமை வீட்டின் பின்புறம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.