முகப்பு
ராமநாதபுரம்

சேதமடைந்த மின் கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை

ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகே சேதமடைந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Updated On : 7 நவம்பர், 2024 at 3:26 AM
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உடைந்து விழும் நிலையில் உள்ள உயா் மின் அழுத்த மின்கம்பம்.
பகிர்:
Updated On : 6 நவம்பர், 2024 at 9:58 PM

ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகே சேதமடைந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே சாலையில் மின் கம்பம் சேதமடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளது. அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், மின் கம்பம் சாய்ந்து விழாதவாறு கம்புகளால் முட்டு கொடுத்து வைத்தனா்.

Updated On : 7 நவம்பர், 2024 at 3:26 AM

இந்த மின் கம்பத்தில் உயா் மின் அழுத்தம் கொண்ட மின்கம்பிகள் உள்ளன. இதனால் இந்த மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Advertisement

இதுகுறித்து தமுமுக நகரச் செயலா் முகம்மது தமீம் தலைமையில் மின்வாரிய செயற்பொறியாளரை சந்தித்து மின் கம்பத்தை மாற்றக் கோரி புதன்கிழமை மனு அளித்தனா்.