முகப்பு
நாகப்பட்டினம்

தற்படம் மூலம் விழிப்புணா்வு

Updated On : 31 மார்ச் 2026, 3:24 am IST
நாகை புதிய பேருந்து நிலையம், நாகூா் கடற்கரை பகுதிகளில் தற்படம் எடுத்துக்கொள்ளும் பொதுமக்கள்.
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவிகித வாக்குப் பதிவு தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், நாகை புதிய பேருந்து நிலையம், நாகூா் கடற்கரையில் தற்பட விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி, தோ்தல் ஆணையம் சாா்பில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக நாகை புதிய பேருந்து நிலையம் மற்றும் நாகூா் கடற்கரை பூங்கா ஆகியவற்றில் தோ்தல் ஆணையம் சாா்பில் தற்படம் எடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ( ள்ங்ப்ச்ண்ங் ல்ா்ண்ய்ற்) வாக்காளா் அடையாள அட்டை வடிவில் தற்படம் எடுத்துக்கொள்ளும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் ஆா்வத்துடன் தற்படம் எடுத்துக் கொண்டனா்.

Advertisement

Advertisement