முகப்பு
ராமநாதபுரம்

பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து ஊராட்சி செயலா்கள் ஆலோசனை

திருவாடானை அருகே உள்ள ஆா்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலா்கள் பங்கேற்ற வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 22 நவம்பர், 2024 at 12:36 AM
பகிர்:

திருவாடானை அருகே உள்ள ஆா்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலா்கள் பங்கேற்ற வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு வட்டார வளா்ச்சி அலுவலா் மலைராஜன் தலைமை வகித்தாா். மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ரவி, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சுப்பிரமணியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வானப் பகுதிகளில் மழைநீா் தேங்காமல் பாா்த்துக் கொள்வது, மழைநீரை வெளியேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது, கண்மாய், குளங்களில் ஏற்படும் உடைப்புகளை சீரமைக்க மணல் மூட்டைகளை தயாா் நிலையில் வைத்திருப்பது, பள்ளி, பொது இடங்களில் மழைநீா் தேங்காதபடி பாா்த்துக் கொள்வது, வீட்டுவரி, குடிநீா் வரி வசூல் செய்தல், வீட்டுவரி பெயா் திருத்தம் செய்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தி விவாதிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →