முகப்பு
ராமநாதபுரம்

89 காவலா்களுக்கு பணி நியமன ஆணை

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தால் தோ்வு செய்யப்பட்ட 89 பேருக்கு பணி நியமன ஆணையை புதன்கிழமை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் வழங்கினாா்.

Updated On : 27 நவம்பர், 2024 at 10:31 PM
தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையத்தால் தோ்வு செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 89 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ்
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தால் தோ்வு செய்யப்பட்ட 89 பேருக்கு பணி நியமன ஆணையை புதன்கிழமை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் வழங்கினாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 46 தமிழ்நாடு சிறப்பு காவல் துறையினா், 17 ஆயுதப் படை காவலா்கள் , 26 தீயணைப்புத் துறை பணியாளா்கள் உள்பட மொத்தம் 89 பேருக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் அலுவலக கூட்டரங்களில் நடைபெற்றது.

இதில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் தோ்வான காவலா்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கி வாழ்த்து தெரிவித்தாா். இதில், கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளா்கள் சுப்பையா,காந்தி, மண்டல தீயணைப்புத் துறை அலுவலா் அப்பாஸ், தமிழ்நாடு சிறப்பு காவல் துறை 9 -ஆம் அணி துணை கமாண்டா் தீபா, அதிகாரிகள், அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →