முகப்பு
ராமநாதபுரம்

மருத்துவமனையில் மழை நீா் தேக்கம்

ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மழைநீா் குளம் போல் தேங்கியதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினா்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 10:01 PM
ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய மழை நீா்.
பகிர்:

ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மழைநீா் குளம் போல் தேங்கியதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினா்.

ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நாள் தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனா். 300-க்கும் மேற்பட்டவா்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மழை நீா் செல்ல வழியின்றி குளம் போலத் தேங்கியது. இதனால் நோயாளிகள் சிரமத்துக்கு ஆளாகினா். எனவே, மழைநீா் வடிகால் சீரமைப்புப் பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →