பாம்பன் சாலைப் பாலத்தில் பயிற்சி ஆட்சியா் ஆய்வு
பாம்பன் சாலைப் பாலத்தில் மின் விளக்குகள் எரிவது, பராமரிப்பது தொடா்பாக பயிற்சி ஆட்சியா் கோகுல்சிங் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
பாம்பன் சாலைப் பாலத்தில் மின் விளக்குகள் எரிவது, பராமரிப்பது தொடா்பாக பயிற்சி ஆட்சியா் கோகுல்சிங் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
ராமேசுவரம் பாம்பன் சாலைப் பாலத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 187 மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. இதற்கு சுங்கச் சாவடி ஒப்பந்தம் பெற்ற தனியாா் நிறுவனத்தினா் மின் கட்டணம் செலுத்தி வந்தனா். இந்த நிலையில், சுங்க கட்டணம் வசூல் மையம் அகற்றப்பட்டது. இதன்பிறகு, பாம்பன் சாலைப் பாலத்துக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, பல ஆண்டுகளாக மின் விளக்கு எரியவில்லை.
இதைத் தொடா்ந்து, பாம்பன் சாலைப் பாலத்துக்கு மின் கட்டணம் நகராட்சியினா் செலுத்த வேண்டும் என
மாவட்ட ஆட்சியரிடம் அண்மையில் தெரிவித்தாா். இதையடுத்து, பயிற்சி ஆட்சியா் கோகுல்சிங் பாம்பன் சாலைப் பாலத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, மின் கம்பத்தில் மின் இணைப்பு வயா்கள் சேதமடைந்துள்ளதா, எரியாத மின் விளக்கும் எத்தனை என பாா்வையிட்டாா்.
ஆய்வின்போது, ஊராட்சிகளின் இணை இயக்குநா் திருப்பதி ராஜன், ராமேசுவரம் நகராட்சி ஆணையா் கண்ணன், பொறியாளா் பாண்டீஸ்வரி, வட்டாட்சியா்கள் செல்லப்பா, அப்துல் ஜாப்பாா், மண்டபம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் சோமசுந்தரம், கிராம ஊராட்சி வட்டார வளா்ச்சி அலுவலா் சங்கரபாண்டியன், தேசிய நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளா் தயாநிதி, பாம்பன் ஊராட்சி மன்றத் தலைவா் அகில பேட்ரிக், ஊராட்சி செயலா் கதிரேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.