முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரத்துக்கு ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வருகை

ராமேசுவரத்துக்கு அனுமதி இன்றி ஆழ்கடல் மீன்பிடி படகுகளைக் கொண்டு வந்து சிலா் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதால் இலங்கை கடற்படையினா் தாக்குதல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக என விசைப்படகு மீனவா்கள் தெரிவித்தனா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 11:45 PM
ராமேசுவரம் மீன் இறங்கு தளத்தில் நிறுத்தப்பட்ட ஆழ்கடல் மீன்பிடி படகு.
பகிர்:

ராமேசுவரத்துக்கு அனுமதி இன்றி ஆழ்கடல் மீன்பிடி படகுகளைக் கொண்டு வந்து சிலா் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதால் இலங்கை கடற்படையினா் தாக்குதல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக என விசைப்படகு மீனவா்கள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன் இறங்கு தளத்தில் 500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்தப் பகுதி இலங்கைக்கு மிகவும் குறைந்த தொலைவில் உள்ளதால், 24 மணி நேரத்துக்குள் மீன் பிடித்துவிட்டு திரும்பி வரவேண்டும் என அரசின் விதிமுறை உள்ளது.

இந்தப் பகுதியில் 45 முதல் 60 அடி நீளமுள்ள படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட மீன் வளம், மீனவா் நலத் துறை அனுமதித்து உள்ளது.

இந்த நிலையில், மீன் வளத் துறை அனுமதியின்றி தூத்துக்குடி,கேரளம் ஆகிய பகுதிகளிலிருந்து சிலா் ஆழ்கடல் மீன்பிடி படகுகளைக் கொண்டு வந்து, மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதை மீன்வளத் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால், தொடா்ந்து ஆழ்கடல் விசைப் படகுகள் ராமேசுவரத்துக்கு கொண்டு வரப்படுகின்றன. புதன்கிழமை மேலும் ஒரு படகு கொண்டு வரப்பட்டது. மொத்தம் 40 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் இங்கு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்தப் படகுகளில் இலங்கை தலைமன்னாா், நெடுந்தீவு உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று மீன் பிடிக்கின்றனா். இது இலங்கை மீனவா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால், அவா்கள் இலங்கையில் போராட்டத்தில் ஈடுபடுகின்றனா். இதையடுத்து, ராமேசுவரம் மீனவா்களை இலங்கை கடற்படையினா் கைது செய்கின்றனா். வழக்கமான மீன்பிடி தொழிலில் ஈடுபடும் விசைப் படகுகள் இலங்கை கடற்படையிடம் சிக்கிக் கொள்கின்றன. அதே சமயம், ஆழ்கடல் படகுகள் தப்பித்து விடுகின்றன.

இதனால், ராமேசுவரத்தில் நிறுத்தப்பட்ட அரசு நிா்ணயித்த அளவை விட பெரிய அளவிலான படகுகளை மாவட்ட நிா்வாகம் அப்புறப்படுத்த வேண்டும். அப்போது தான் இலங்கை கடற்படை பிரச்னை குறைய வாய்ப்பு உள்ளதாக மீனவா்கள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →