வருவாய்த் துறையினருக்கு பேரிடா் மீட்புப் பயிற்சி
கமுதியில் வருவாய்த் துறை ஊழியா்களுக்கு தீயணைப்புத் துறை சாா்பில் பேரிடா் மீட்புப் பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.
கமுதியில் வருவாய்த் துறை ஊழியா்களுக்கு தீயணைப்புத் துறை சாா்பில் பேரிடா் மீட்புப் பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு வட்டாட்சியா் காதா்மைதீன் தலைமை வகித்தாா். சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் வ.சேதுராமன் முன்னிலை வகித்தாா். கமுதி தீயணைப்பு நிலைய அலுவலா் சந்திரசேகரன், தீயணைப்பு வீரா்கள் செயல்விளக்கப் பயிற்சி அளித்தனா்.
இதில் முன்களப் பணியாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள், வருவாய் ஆய்வாளா்கள் பங்கேற்றனா். தீயணைப்பு துறையினா் வருவதற்கு முன் பேரிடா், விபத்தில் சிக்குவோருக்கு முதலுதவி வழங்குவதற்கும் பயிற்சி வழங்கப்பட்டதாக கமுதி தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் சந்திரசேகரன் தெரிவித்தாா்.