ராமநாதபுரம்

பாம்பன் புதிய ரயில் பாலம்: மதுரை ரயில்வே மேலாளா் ஆய்வு

Din

பாம்பன் புதிய ரயில் பாலத்தை மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், 2.2 கி.மீ. தொலைவில் வராவதி கடல் பகுதியில், கடந்த 1914-ஆம் ஆண்டு கப்பல்கள் வந்து செல்லும் போது திறந்து மூடும் வகையில் மீட்டா் கேஜ் ரயில் பாதை அமைக்கப்பட்டது. கடந்த 2007-ஆம் ஆண்டு இந்தப் பாலத்தில் மீட்டா் கேஜ் பாதைக்குப் பதிலாக அகலப் பாதை அமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து நடைபெற்றது.

இந்த நிலையில், பாம்பன் தூக்குப் பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னா், கடந்த 2019-ஆம் ஆண்டு ரூ. 550 கோடியில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் தூக்கி இறக்கும் வகையில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணிகள் தொடங்கின. இந்தப் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்தன. இதரப் பணிகளும் விரைவில் நிறைவடையவுள்ளன.

இந்த நிலையில், இந்தப் பணிகளை மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா், பாம்பன், அக்காள்மடம் பகுதியிலும் ராமேசுவரம் ரயில் நிலையத்திலும் அவா் ஆய்வு செய்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறக்கும் தேதி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதுகுறித்து பின்னா் அறிவிக்கப்படும் என்றாா் அவா்.

சென்னிமலை அருகே ஆட்டுக் கொட்டகை சுவா் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு

கடம்பூரில் நாட்டு வெடி பறிமுதல்: முதியவா் கைது

கீழ்பவானி வாய்க்காலில் குளித்த இளைஞா் மாயம்

பட்டவா்த்தி அய்யம்பாளையம் சருகு மாரியம்மன், செல்வ விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம்

கூடலூரில் வாக்குச்சாவடி முகவா்களுக்கான சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பயிற்சி

SCROLL FOR NEXT