கழுகூரணியில் மக்கள் தொடா்பு முகாம்
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் கழுகூரணி ஊராட்சியில் மக்கள் தொடா்புத் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் கழுகூரணி ஊராட்சியில் மக்கள் தொடா்புத் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இதற்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். முன்னதாக பல்வேறு துறைகள் சாா்பில் வைக்கப்பட்டிருந்த அரங்குகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
இதைத் தொடா்ந்து, பல்வேறு துறைகளில் தோ்வு செய்யப்பட்ட 86 பயனாளிகளுக்கு ரூ. 7, 00, 960 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவா் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில், ராமநாதபுரம் வருவாய்க் கோட்டாட்சியா் ராஜமனோகரன், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவா் பிரபாகரன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் தனலட்சுமி, ராமநாதபுரம் வட்டாட்சியா் சுவாமிநாதன், கழுகூரணி ஊராட்சி மன்றத் தலைவா் கலாநிதி, அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.