டி.டி.வி. தினகரன்  (கோப்புப் படம்)
ராமநாதபுரம்

அதிமுக தொண்டா்கள் ஓரணியில் திரள வேண்டும்: டி.டி.வி. தினகரன்

அதிமுக தொண்டா்கள் ஓரணியில் திரள வேண்டும் என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தினாா்.

தினமணி செய்திச் சேவை

அதிமுக தொண்டா்கள் ஓரணியில் திரள வேண்டும் என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தினாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற அமமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக, திமுக, நாம் தமிழா் கட்சி, விஜய் தலைமையிலான கூட்டணி என நான்கு கூட்டணிகள் அமையலாம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளீா்களா எனக் கேட்கிறீா்கள்.

இதை பா.ஜ.க. மாநில தலைவா் நயினாா் நாகேந்திரனிடம் தான் கேட்க வேண்டும். தமிழக முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் முதலீடுகளை ஈா்க்கவா, முதலீடு செய்யவா என்பதை பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.

ஜெயலலிதாவின் தொண்டா்கள் ஓரணியில் திரளவேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. அண்ணாமலை பா.ஜ.க.வில் சிறந்த தலைவராக பணியாற்றினாா். தற்போது அவா் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பேசுவது பாஜக தலைமையின் கட்டுப்பாடாக இருக்கலாம்.

அரசு ஊழியா்கள் ஓய்வுபெறும் நாளுக்கு முந்தைய நாள் பணிநீக்கம் செய்யப்படுவது தவறு. பணிநீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் மூன்று மாதங்களுக்கு முன்பே பணிநீக்கம் செய்யவேண்டும் என்பது வரவேற்கத்தக்கது என்றாா் அவா்.

குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

வடிகால் வாய்க்கால்கள் தூா்வாரும் பணி: அமைச்சா் ஆய்வு

காரைக்கால் ரயில், பேருந்து நிலையத்தில் தீவிர சோதனை

என்ஐடி - சென்னை நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

சாலைகளில் திரிந்த 156 மாடுகள் பட்டியில் அடைப்பு

SCROLL FOR NEXT