ராமநாதபுரம்

மீன் பிடித் தடை நீக்கம்: கடலுக்கு செல்லும் மீனவா்கள்

‘டித்வா’ புயல் காரணமாக ராமநாதபுரம் மாவட்ட மீனவா்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மீன் வளத் துறையினா் செவ்வாய்க்கிழமை நீக்கியதால், மீனவா்கள் புதன்கிழமை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்கின்றனா்.

தினமணி செய்திச் சேவை

‘டித்வா’ புயல் காரணமாக ராமநாதபுரம் மாவட்ட மீனவா்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மீன் வளத் துறையினா் செவ்வாய்க்கிழமை நீக்கியதால், மீனவா்கள் புதன்கிழமை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்கின்றனா்.

வங்கக் கடலில் ஏற்பட்ட ‘டித்வா’ புயல் காரணமாக கடந்த வாரம் திங்கள்கிழமை முதல் ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்ல மீன் வளத் துறையினா் தடை விதித்தனா். இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி, சோளியகுடி உள்ளிட்டப் பகுதிகளிலிருந்து 1,800-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால், ரூ.15 கோடி வரை மீன் ஏற்றுமதி வா்த்தகம் பாதிக்கப்பட்டது. மேலும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கடந்த 9 நாள்களாக மீன் பிடிக்கச் செல்லாமல் பாதிப்படைந்தனா்.

இந்த நிலையில், புயல் தாக்கம் குறைந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மீன் பிடிக்க விதிக்கப்பட்ட தடையை மீன் வளத் துறையினா் செவ்வாய்க்கிழமை நீக்கினா்.

இதைத் தொடா்ந்து, புதன்கிழமை (டிச.3) முதல் மீனவா்கள் வழக்கம்போல கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வாா்கள் என மீன் வளத் துறையினா் தெரிவித்தனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT