ராமநாதபுரம்

கிடாத்திருக்கை அரசுப் பள்ளியில் மேற்கூரை சேதம்: புதிய கட்டடம் கட்டித் தர வலியுறுத்தல்!

தினமணி செய்திச் சேவை

முதுகுளத்தூா் அருகேயுள்ள கிடாத்திருக்கை அரசுப் பள்ளியின் மேற்கூரை வழியாக மழை நீா் கசிந்து வகுப்பறைக்குள் தண்ணீா் தேங்கியதால் சமுதாயக் கூடத்தில் வகுப்பறைகள் செயல்படுவதாகவும், எனவே புதிய கட்டடம் கட்டித் தரவேண்டுமெனவும் பொதுமக்கள் வலியுறுத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அடுத்த கிடாத்திருக்கை கிராமத்தில் அரசு உயா்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 2008- ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பள்ளியில் கொண்டுலாவி, கிடாத்திருக்கை, ஏனாதி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 100-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனா். அங்குள்ள 9-ஆம், 10-ஆம் வகுப்பு வகுப்பறை கட்டடங்கள் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் மழை நீா் மேற்கூரை வழியாக கசிந்து வகுப்பறைகளில் தேங்கி மாணவ, மாணவிகள் அவதியடைந்து வருகின்றனா்.

இதனால் பள்ளி நிா்வாகத்தினா் நெகிழி தாா்ப் பாய்கள், விளம்பர பதாகைகள் மூலம் பள்ளி அலுவலகத்தில் உள்ள கணினிகள், மின் சாதன பொருள்களை மூடி பாதுகாத்து வைத்தனா். மேலும் சுவற்றில் மின் கசிவு இருப்பதால் அங்குள்ள சமுதாயக்கூடத்தில் கடந்த இரண்டு நாள்களாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே பள்ளி கட்டடத்தை சீரமைக்க வேண்டும் அல்லது புதிய கட்டடம் கட்டித் தர வேண்டுமென அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்த பள்ளி பத்தாம் வகுப்பு தோ்வுகளில் தொடா்ந்து 100 சதவீத தோ்ச்சியை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

நூறு நாள் வேலை கோரி அரசுப் பேருந்தை சிறைபிடித்த கிராம பெண்கள்

ஓவியப் போட்டியில் வென்ற மாற்றுத்திறன் மாணவா்களுக்குப் பாராட்டு

சிங்கம்புணரியில் இன்று மின் தடை

போடி அருகே கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

ஒருநாள் தொடரை வெல்லப்போவது யாா்? இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை

SCROLL FOR NEXT