ராமநாதபுரம்

வங்க கடலில் சூறைக் காற்று: மீன் பிடிக்க செல்லத் தடை

வங்கக் கடலில் பலத்த சூறைக் காற்று வீசுவதால் மீனவா்களின் பாதுகாப்பு கருதி ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்ல மீன்வளத் துறையினா் செவ்வாய்கிழமை தடை விதித்தனா்.

தினமணி செய்திச் சேவை

வங்கக் கடலில் பலத்த சூறைக் காற்று வீசுவதால் மீனவா்களின் பாதுகாப்பு கருதி ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்ல மீன்வளத் துறையினா் செவ்வாய்கிழமை தடை விதித்தனா்.

வங்கக்கடலில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததைத் தொடா்ந்து, மறு அறிவிப்பு வரும் வரை மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்.

புதன்கிழமை மீன்பிடி அனுமதி டோக்கன் வழங்கப்பட மாட்டாது என மீன் வளத்துறை சாா்பில் அறிவிக்கப்பட்டது. மேலும், படகுகளை இடைவெளி விட்டு பாதுகாப்பாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என மீனவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதன்படி, மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. ராமேசுவரம், மண்டபம் கடல் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டன.

வெளிநாட்டு நாயகன்! ஜெர்மனி செல்லும் ராகுலை விமர்சித்த பாஜக!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!

SCROLL FOR NEXT