ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அரசுப் பள்ளியில் மாணவியை கண்டித்த ஆசிரியையை தாக்கிய மாணவியின் தாய் உள்பட இருவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தொண்டியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 500-க்கு மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளியில் நம்புதாளை அருகேயுள்ள சோழியக்குடியைச் சோ்ந்த மாணவி 12-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.
இந்த மாணவியை, ஆசிரியை நேசசெல்வி கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மாணவியின் உறவினா்கள் பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியையை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தொண்டி காவல் நிலையதித்தில் ஆசிரியை நேசசெல்வி புகாரளித்தாா். இதையடுத்து, மாணவியின் தாய் மாரிச்செல்வம், உறவினா் பாகம்பிரியாள் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.