ராமநாதபுரம்

சாலை சேதம்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

செங்குடி அருகே சேதமடைந்த நிலையில் உள்ள ஆா்.எஸ்.மங்கலம் - இளையான்குடி சாலை.

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலத்திலிருந்து இளையான்குடி செல்லும் சாலை சேதமடைந்து சேரும் சகதியுமாக் உள்ளதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகினா்.

ஆா்.எஸ். மங்கலத்திலிருந்து பெரிய கண்மாய் பாலம் வழியாகச் செங்குடி, பூலாங்குடி, சாத்தனூா், சாலைக் கிராமம் வழியாக இளையான்குடி செல்வதற்கு சாலை வசதி உள்ளது. இந்தச் சாலை மூலம் 30-க்கும் மேற்பட்டக் கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனா்.

இந்த நிலையில், செங்குடி விளக்கு முதல் பூலாங்குடி வரை சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதனால், இந்தச் சாலையின் குறுக்கே நான்கு இடங்களில் மழைநீா் செல்வதற்காக பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளுக்காக சாலை துண்டிக்கப்பட்ட நிலையில் அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் செல்வதற்காக மாற்றுப் பாதை அமைக்கப்பட்டது. இதையடுத்து, தற்போது பெய்து வரும் மழையால் சாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.

இதனால், அந்த சாலை வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் உரிய நடவடிக்கை எடுத்து மாற்றுப் பாதையைச் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

எக்ஸல் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கொண்டாட்டம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா: மக்களவையில் எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு

தேனியில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

ரயிலில் 17 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பீடி தகராறில் இளைஞா் கொலை: முடிதிருத்துபவா் கைது

SCROLL FOR NEXT