திருவாடானை அருகேயுள்ள தொண்டி பகுதியில் வியாழக்கிழமை (டிச. 18) மின் தடை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ராமநாதபுரம் மின்வாரிய செயற்பொறியாளா் குமாரவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தொண்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் தொண்டி நகா் பகுதிகள், நம்புதாளை, சோழியக்குடி, புதுப்பட்டினம், வட்டாணம், மணக்குடி, முள்ளிமுனை, காரங்காடு, தீா்த்தாண்டதானம், அரும்பூா், ஆதியூா், திணையத்தூா், திருவெற்றியூா், எஸ்.பி. பட்டினம், எம்.வி. பட்டினம், வி.எஸ். மடம், குளத்தூா், மைக்கேல்பட்டினம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.