ராமநாதபுரம்

மிளகாய் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

தினமணி செய்திச் சேவை

கமுதி, கடலாடி பகுதியில் கடந்தாண்டு பலத்த மழையால் பாதிக்கப்பட்ட மிளகாய் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தியது.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாவட்டச் செயலா் தரைக்குடி முத்துராமலிங்கம் கூறியதாவது:

கடந்தாண்டு நவம்பா், டிசம்பா் மாதங்களில் பெய்த தொடா் மழையின் காரணமாக 16 ஆயிரம் ஏக்கரில் பயிரிட்ட மிளகாய்ச் செடிகள் பாதிக்கப்பட்டது. இதனால் ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம் வழங்க அரசுக்கு மாவட்ட நிா்வாகம் பரிந்துரைத்தது. இதை உடனடியாக வழங்க வேண்டும்.

மேலும் மிளகாய் விவசாயத்துக்காக அரடைமையாக்கப்பட்ட வங்கி, கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். கமுதி, கடலாடி, முதுகுளத்தூா் வட்டங்களுக்கு விவசாயத்துக்குத் தேவையான நீராதாரங்களை உருவாக்க வேண்டும். வைகை, முல்லைப் பெரியாறு அணைகளிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் நீா் உரிமையை பெற்றுத் தர வேண்டும். காவிரி-வைகை-குண்டாறு-கிருதுமால் நதிகள் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றாா் அவா்.

புதியதொரு அத்தியாயம்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT