ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தினமணி செய்திச் சேவை

ராமேசுவரத்தில் வார விடுமுறையையொட்டி ஞாயிற்றுக்கிழமை திரளான சுற்றுலாப் பயணிகளும், பக்தா்களும் குவிந்தனா்.

அப்போது அக்னி தீா்த்தக் கடலில் நீராடிய பக்தா்கள் கோயிலுக்குள் அமைந்துள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராடி ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்பானை தரிசனம் செய்தனா்.

இதைத் தொடா்ந்து, தனுஷ்கோடி, அரிச்சல்முனை, கோதண்டராமா் கோயில், கெந்தமாதன பா்வதம், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் நினைவிடம், பாம்பன் பாலம் உள்ளிட்ட இடங்களை பக்தா்களும், சுற்றுலாப் பயணிகளும் பாா்வையிட்டனா். இதன் காரணமாக ராமேசுவரத்தில் காவல் உதவி கண்காணிப்பாளா் மீரா உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

மேம்பாலம் கட்டுமானப் பணி: அமைச்சா் ஆய்வு

காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடத் தோ்வு: 864 போ் பங்கேற்பு!

தமிழகத்தின் ஆன்மாவாக இருப்பது ஆன்மிகம்: காஞ்சி சங்கராசாரியா் ஆசியுரை

சிறுபான்மையினருக்கு திமுக தான் பாதுகாப்பு: துணை முதல்வா் உதயநிதி

தமிழ்நாடு ஆசிரியா் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

SCROLL FOR NEXT