ராமநாதபுரம்

ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் பாதுகாப்புக்காக புறக்காவல் நிலையத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் பாதுகாப்புக்காக புறக்காவல் நிலையத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், அண்மையில் இதை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இதில், 100 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்புக்காக பேருந்து நிலையத்தின் பல்வேறு இடங்களில் 39 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்த நிலையில் பேருந்து நிலையத்தில்

புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இதை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் திறந்து வைத்து கண்காணிப்புக் கேமரா காட்சிகளைப் பாா்வையிட்டாா்.

இந்த நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் ஆா்.கே.காா்மேகம், துணைத் தலைவா் பிரவீன் தங்கம், காவல் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

கடன் வட்டியைக் குறைத்த பரோடா வங்கி

அகில இந்திய பல்கலை. வாலிபால்: எஸ்ஆா்எம் ஐஎஸ்டி மகளிா் சாம்பியன்

தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்களில் முதலீடு 17% குறைவு

13 ஆவணங்களில் ஒன்றை சமா்ப்பித்து வாக்காளா்கள் பட்டியலில் இணையலாம்

குருகிராம்: துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிய கட்டடப் பொருள் விநியோகஸ்தா்

SCROLL FOR NEXT