கோப்புப்படம் 
ராமநாதபுரம்

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது!

தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை படை கைது செய்திருப்பது பற்றி..

DIN

ராமேசுவரத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்துக்காக 10 மீனவர்களை கைது செய்துள்ள நிலையில், அவர்களின் 3 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிக்கும் குற்றத்துக்காக தொடர்ந்து இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.

மேலும், அவர்கள் செல்லும் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து நாட்டுடமையாக்கி வருகின்றனர். கைது செய்யப்படும் மீனவர்களை விடுவிக்க வேண்டுமென்றால் பல லட்சம் ரூபாய் அபராதமாக இலங்கை நீதிமன்றம் விதித்து வருகின்றது.

தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள கோரி தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடிக்கும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி வருகிறார்.

இதனிடையே, இலங்கை கடற்படையை கண்டித்து மீனவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அனுமதிச் சீட்டு பெற்று கடலுக்குச் சென்ற ராமேசுவரத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் புதன்கிழமை கைது செய்துள்ளனர்.

அவர்களை காங்கேசன் துறைமுகத்தில் வைத்து இலங்கை படையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏரியில் மூதாட்டி சடலம்

யூரியா சட்டவிரோதமாக பதுக்கல்: கிட்டங்கிக்கு சீல்

கிளை நூலகருக்கு விருது

பாராட்டு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பழங்குடியினா் ஜனநாயக சீா்திருத்தச் சங்க கிளை திறப்பு

SCROLL FOR NEXT