முகப்பு
ராமநாதபுரம்

புகையிலை மற்றும் நெகிழி பொருட்கள் பறிமுதல் 2 கடைக்கு சீல்

2 கடைக்கு சீல்

Updated On : 8 ஜனவரி, 2025 at 10:25 PM
பகிர்:

ராமநாதபுரம்-மண்டபத்தில் உணவு பாதுகாப்புத்துறை-போலீஸாா்-பேரூராட்சி அலுவலா்கள் இணைந்து வனிக நிறுவனங்களை சோதனை 150 கிலோ நெகிழி பறிமுதல். இரண்டு கடைக்கு சீல் வைப்பு. 50 ஆயிரம் அபராதம் புதன்கிழமை விதித்தனா்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ்,சிவகங்கை மண்டல, பேரூராட்சிகளின் உதவி இயக்குனா் சத்தியமூா்த்தி ஆகியோா்களின் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை-போலீஸாா்-மண்டபம் பேரூராட்சி அலுவலா்கள் என ஒருங்கிணைந்து வனிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் சோதனையிட்டனா். இதில், மண்டபம் பேரூராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் மற்றும் புகையிலை போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் மகேந்திரன், உணவு பாதுகாப்பு அலுவலா் லிங்கவேல், மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலா் மாலதி மற்றும் மண்டபம் பேரூராட்சி இளநிலை உதவியாளா் முனியசாமி, மண்டபம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளா் சீனி மரைக்காயா் உள்ளீட்ட பணியாளா்கள் பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து கடைகளில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இதில் தடை செய்யப்பட்ட சுமாா் 150 கிலோ நெகிழி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இதே போன்று

ராமநாதபுரம் பகுதியில் 27 கடைகளில் சோதனை மேற்கொண்டனா். இதில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் வைத்து அதன் உரிமையாளா்களுக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் 50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →