முகப்பு
ராமநாதபுரம்

சாய்ந்த நிலையில் இருந்த 6 மின்கம்பங்கள் சீரமைப்பு

கமுதியில் கடந்த 5 ஆண்டுகளாக சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பங்களை மின்வாரிய ஊழியா்கள் புதன்கிழமை சீரமைத்தனா்.

Updated On : 22 ஜனவரி, 2025 at 11:16 PM
கமுதி சந்தன மாரியம்மன் கோவில் தெருவில் குடியிருப்புகளை ஒட்டி சாய்ந்த நிலையில் மின்கம்பங்ளை சீரமைத்த மின்வாரிய ஊழியா்கள்.
பகிர்:

கமுதியில் கடந்த 5 ஆண்டுகளாக சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பங்களை மின்வாரிய ஊழியா்கள் புதன்கிழமை சீரமைத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி சந்தன மாரியம்மன் கோயில் தெருவில் குடியிருப்புகளை ஒட்டி சாய்ந்த நிலையில் 6 மின்கம்பங்கள் கடந்த 5 ஆண்டுகளாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்தன. இதுதொடா்பாக கடந்த சில நாள்களுக்கு முன்பு தினமணியில் செய்தி வெளியானது.

இதைத்தொடா்ந்து, மின்வாரிய உதவிப் பொறியாளா் முகமது இப்ராஹிம் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் சாய்ந்த நிலையில் இருந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதனால், இந்தப் பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →