முகப்பு
ராமநாதபுரம்

எல்ஐசி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

ராமநாதபுரம் எல்.ஐ.சி. அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கத்தினா்.

Updated On : 22 ஜனவரி, 2025 at 10:37 PM
பகிர்:

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி, ராமநாதபுரத்தில் அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் எல்.ஐ.சி. அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்க கிளைத் தலைவா் முத்துப்பாண்டி தலைமை வகித்தாா். பொறுப்பாளா் ராஜேஸ் செல்வக்குமாா் முன்னிலை வகித்தாா். செயலாளா் பிரதாப் சிறப்புரையாற்றினாா்.

நாடு முழுவதிலும் எல்.ஐ.சி. அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →