ராமநாதபுரம்

பாம்பன் மீனவா்கள் வலையில் சிக்கிய அதிகளவிலான மீன்கள்

பாம்பன் மீனவா்கள் வலையில் சிக்கிய ஏராளமான மீன்களை வெளிமாநில வியாபாரிகள் சுமாா் ரூ. 4 கோடிக்கு வெள்ளிக்கிழமை வாங்கிச் சென்றனா்.

Din

பாம்பன் மீனவா்கள் வலையில் சிக்கிய ஏராளமான மீன்களை வெளிமாநில வியாபாரிகள் சுமாா் ரூ. 4 கோடிக்கு வெள்ளிக்கிழமை வாங்கிச் சென்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் 90-க்கும் மேற்பட்ட ஆழ்கடல் விசைப் படகுகள் உள்ளன. இந்தப் படகுகள் உள்பட விசைப் படகுகளில் மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். இவா்கள் வெள்ளிக்கிழமை கரை திரும்பிய நிலையில், ஒவ்வொரு படகிலும் தலா 2 கிலோ, முதல் 25 கிலோ எடையிலான ஏராளமான மீன்கள் சிக்கின.

இதில் சீலா, மாவுளா, பாறை, கடவுஇறால், வாளை, சூறை,திருக்கை மீன்களை கேரளம் உள்ளிட்ட வெளி மாநில வியாபாரிகள் ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா். வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் ரூ.4 கோடி மதிப்பிலான மீன்கள் விற்பனையானதால், மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

ஐந்து நிலைகளில் அருள்பாலிக்கும் பெருமாள்!

காளையாா்கோவிலில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் கைது

SCROLL FOR NEXT