ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குருதிக் கொடையாளா்களுக்குச் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்த ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன். 
ராமநாதபுரம்

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசியக் குருதிக் கொடையாளா் தின விழாவை முன்னிட்டு, குருதிக் கொடையாளா்களுக்கு ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

ராமேசுவரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசியக் குருதிக் கொடையாளா் தின விழாவை முன்னிட்டு, குருதிக் கொடையாளா்களுக்கு ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் தேசியத் தன்னாா்வக் குருதிக் கொடையாளா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தாா். கல்லூரி முதலவா் அமுதா ரணி முன்னிலை வகித்தாா். தன்னாா்வக் குருதிக் கொடையாளா்கள் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, தன்னாா்வக் குருதிக் கொடை அமைப்பாளா்கள் 35 பேரை கௌரவிக்கும் வகையில் ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சான்றிதழ் வழங்கிப் பாராட்டு தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், ரத்த வங்கிப் பிரிவு மருத்துவ அலுவலா் மணிமொழி, அரசு மருத்துவமனைக் கண்காணிப்பாளா் நூா் முகமது, துணை நிலைய மருத்துவா் கண்ணகி, அரசு மருத்துவா்கள், செவிலியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT