ராமநாதபுரம் மாவட்டம், உப்பூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவ.11) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
உப்பூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பாரமரிப்புப் பணிகள் உப்பூா், கடலூா், மோா் பண்ணை, சித்தூா் வாடி, அனந்தனாா் கோட்டை, காவனூா், துத்திஏந்தல், வெட்டுக்குளம், ஊரணங்குடி, புறக்கரை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளா் (பொறுப்பு) குமரவேல் தெரிவித்தாா்.