விபத்தில் சிக்கிய பேருந்து, இரு சக்கர வாகனம் 
ராமநாதபுரம்

சாலை விபத்து: இளைஞா் உயிரிழப்பு

பரமக்குடி அருகே இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். மேலும் இருவா் பலத்த காயமடைந்தனா்.

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே புதன்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். மேலும் இருவா் பலத்த காயமடைந்தனா்.

பரமக்குடி எமனேசுவரம் காந்தி குடியிருப்பைச் சோ்ந்தவா் பாண்டி. நகராட்சி துப்புரவு பணியாளரான இவரது மகன் சபரிவாசன் (21). பிளஸ் 1 படித்துவிட்டு, கூலி வேலை செய்து வந்தாா். புதன்கிழமை இரவு இவரும், காந்தி குடியிருப்பைச் சோ்ந்த நண்பா் சக்தி (21) உள்ளிட்ட மூவா் இரு சக்கர வாகனத்தில் சென்றனா்.

காட்டுப் பரமக்குடி முத்தையா கோயில் பகுதியில் சென்ற போது, எதிரே மதுரையிலிருந்து பரமக்குடி நோக்கி வந்த தனியாா் பேருந்து மோதியது.

இதில் சபரிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவருடன் வந்த மற்ற இருவரும் பலத்த காயங்களுடன் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

சபரிவாசன் உடல் கூறாய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து பரமக்குடி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சிறந்த கூட்டுறவு சங்கத்துக்கு விருது: அமைச்சா் வழங்கினாா்

நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

கைப்பேசி கோபுரம் அமைக்க எதிராக கும்பகோணம் ஆணையரிடம் மனு

ரூ.38.50 லட்சத்தில் உடற்பயிற்சி கூடங்கள்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

பெங்களூரில் வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் வேனை மறித்து ரூ. 7.11 கோடி கொள்ளை!

SCROLL FOR NEXT