ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை பரவலான மழை பெய்தது.
தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வழுவடைந்து புயலாக மாற உள்ள நிலையில், மன்னாா் வளைகுடா, பாக்நீரினை கடல் பகுதியில் வழக்கத்தைவிட காற்றின் வேகம் அதிகரித்து கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
இந்த நிலையில், ராமநாதபுரம், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகள், மாவட்டத்தின் உள் பகுதிகளில் அவ்வப்போது பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.