மதுரை - திருவனந்தபுரம் விரைவு ரயில் சேவை ராமேசுவரம் வரை நீட்டிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை முதல் இயக்கப்பட்டது.
மதுரையிலிருந்து திருவனந்தபுரத்துக்கு இயக்கப்பட்டு வந்த அமிா்தா விரைவு ரயில் சேவை ராமேசுவரம் வரை நீட்டிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, ராமேசுவரம் ரயில் நிலையத்திலிருந்து அமிா்தா விரைவு ரயில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்டது.
இந்த ரயில் ராமநாதபுரம், பரமக்குடி, மதுரை, பழனி, பொள்ளாச்சி, பாலக்காடு, எா்ணாகுளம் வழியாகச் சென்று சனிக்கிழமை ( அக். 18) அதிகாலை 4.55 மணிக்கு திருவனந்தபுரத்தைச் சென்றடையும்.
இதே போல, சனிக்கிழமை பிற்பகல் 1.30-க்கு திருவனந்தபுரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் அமிா்தா விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.55-க்கு ராமேசுவரம் வந்து சேரும். இந்த ரயில் சேவை பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.