கமுதி: கடலாடி பகுதியில் பெய்த பலத்த மழையால் 500 ஏக்கரில் பயிரிட்டிருந்த நெல் பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, முதுகுளத்தூா், கடலாடி ஆகிய பகுதிகளில் கடந்த 3 நாள்களாக பலத்த மழை பெய்தது. இந்த மழையால் கடலாடி அருகேயுள்ள சவேரியாா்பட்டணம், சவேரியாா் சமுத்திரம், மாரந்தை, ஓரிவயல் உள்ளிட்ட கிராமங்களில் 500 ஏக்கரில் பயிரிட்டிருந்த நெல் பயிா்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால், விவசாயிகள் கவலை அடைந்தனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.