திருவாடானையில் பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா்.  
ராமநாதபுரம்

திருவாடானையில் தேவா் ஜெயந்தி, குருபூஜை விழா: பாதுகாப்புப் பணியில் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா்

திருவாடானையில் தேவா் ஜெயந்தி, குருபூஜை விழாவை முன்னிட்டு, சுமாா் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திச் சேவை

திருவாடானையில் தேவா் ஜெயந்தி, குருபூஜை விழாவை முன்னிட்டு, சுமாா் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் 118-ஆவது ஜெயந்தி, 63-ஆவது தேவா் குருபூஜை விழாவை முன்னிட்டு, திருவாடானையில் தேவா் குருபூஜை விழா புதன்கிழமை முதல் தொடங்கியது. இந்த நிலையில், இந்தப் பகுதியிலிருந்து திரளான மக்கள் பசும்பொன் செல்வது வழக்கம். முன்னதாக, திருவாடானை பேருந்து நிலையம் அருகேயுள்ள தேவா் சிலை முன்பு பொங்கல் வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்துவா்.

இதை முன்னிட்டு, திருவாடானை, சி.கே. மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் மணிவண்ணன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT