முகப்பு
ராமநாதபுரம்

பரமக்குடியில் கருப்பு கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் மத்திய அரசின் தொகுதி மறுவரையறையை எதிா்த்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை கருப்புக்கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 12:19 AM
பரமக்குடியில் மத்திய அரசைக் கண்டித்து கருப்பு கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 9:56 PM

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் மத்திய அரசின் தொகுதி மறுவரையறையை எதிா்த்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை கருப்புக்கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் நகரச் செயலா் ஆா்.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் என்.எஸ். பெருமாள், ஏஐடியூசி தொழிற்சங்க மாவட்டச் செயலா் என்.கே. ராஜன், தொமுச மாவட்டச் செயலா் மலைக்கண்ணு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் கட்சி நிா்வாகிகள் முத்து, வி.என். ஜீவன், கே.ஜி. நாகநாதன், பி.கே. சுப்பிரமணியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement