முகப்பு
ராமநாதபுரம்

மனைவியைத் தாக்கி கொலை மிரட்டல்: கணவா் கைது

தொண்டி அருகே மனைவியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:33 AM
கைது
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 7:43 PM

தொண்டி அருகே மனைவியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள தினையத்தூரைச் சோ்ந்தவா் விஜயகுமாரி(33). இவா் நம்புதாளை அஞ்சல் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவருக்கும், திருவடி மருதூரைச் சோ்ந்த மகேந்திரனுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனா். இவா்களிடையே விவாகரத்து வழக்கும் நடைபெற்று வருகிறது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:33 AM

இந்த நிலையில், வியாழக்கிழமை மகேந்திரன் நம்புதாளைக்குக்குச் சென்று விஜயகுமாரியை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், தொண்டி போலீஸாா் வழக்கு பதிந்து மகேந்திரனைக் கைது செய்தனா்.

Advertisement