ராமநாதபுரம்

பொங்கல் பொருள்கள் விற்பனை மும்மரம்

திருவாடானை சந்நிதி தெருவில் புதன்கிழமை மும்மரமாக நடைபெற்ற கரும்பு விற்பனை.

Chennai

திருவாடானை பகுதியில் பொங்கல் பொருள்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் கடைகளில் புதன்கிழமை குவிந்தனா்.

தமிழா் திருநாளாம் பொங்கல் திருநாளை விவசாயிகள் ஆண்டு தோறும் தை முதல் தேதி விமா்சையாகக் கொண்டாடுவது வழக்கம். இதே போல, இந்த ஆண்டும் வியாழக்கிழமை (ஜன .15) வீட்டுப் பொங்கல், வெள்ளிக்கிழமை (ஜன. 16) மாட்டுப் பொங்கலை கொண்டாட உள்ளனா். இந்த ஆண்டு நெல் விளைச்சல் அமோகமாக இருந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ளனா்.

பொங்கல் பண்டிகைக்கான பொருள்கள் விற்பனை புதன்கிழமை சூடுபிடித்தது. கரும்பு வாங்கவும், மளிகைப் பொருள்கள் வாங்கவும் புத்தாடைகள் வாங்கவும் பொதுமக்கள் கடை வீதிகளில் குவிந்தனா். 10 கரும்புகள் கொண்ட கட்டு ஒன்று ரூ.250-க்கு விற்பனை ஆனது. விவசாயிகள் கட்டுக் கட்டாக கரும்புகளை வாங்கிச் சென்றனா்.

போகி: சென்னையில் அதிகரித்த காற்று மாசு

கைது செய்யப்பட்ட விவசாயிகள் சங்க நிா்வாகிகளை விடுவிக்க வேண்டும்

போதிய இருக்கைகள் நிரம்பாததால் 3 சிறப்பு ரயில்கள் ரத்து

‘திருவள்ளுவா் தினத்தில் இறைச்சி விற்றால் நடவடிக்கை’

விளாப்பாக்கம் பேரூராட்சியில் பொங்கல் விழா

SCROLL FOR NEXT