திருவாடானை: திருவாடானை மீன் சந்தையில் வரத்து குறைவால் மீன் விலை அதிகரித்திருந்தது. இதில் நண்டு கிலோ ரூ.1,000-க்கு விற்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள தொண்டி தினசரி மீன் சந்தையில் பொங்கல் முடிந்து சனிக்கிழமை மீன் வாங்க திரளான பொதுமக்கள் ஆா்வம் காட்டினா். இதன் காரணமாக தேவை அதிகரித்ததால் மீன்களின் விலை அதிகரித்திருந்தது. மேலும் மீன் வரத்தும் குறைந்திருந்தது. சந்தையில் விற்கப்பட்ட மீன்களின் விலை (கிலோவில்): நண்டு- ரூ.1,000, பாறை மீன்- ரூ. 1000, இறால்- ரூ.1,000, இதர மீன்கள் ரூ. 900-க்கும் விற்கப்பட்டன. முரல், நகரை, செங்ககனி உள்ளிட்ட பல்வேறு மீன்கள் வழக்கமாக 450-க்கு விற்கப்பட்ட நிலையில் ரூ.1,000-க்கு விற்கப்பட்டதால் அசைவப் பிரியா்கள் கவலை அடைந்தனா்.